Connect with us

latest news

பூரண மதுவிலக்கு தமிழகத்தில் இப்போது சாத்தியமில்லை!. அமைச்சர் முத்துசாமி..

Published

on

muthusamy

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழக்க கர்ணாபுரம் ஊரே சோக மயமானது. தொடர்ந்து பலரும் உயிரிழந்து வந்ததால் இப்போது வரை 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

எனவே, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு, இந்த விவகாரம் ஆளும் தமிழக அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்தே கள்ளச்சாராயாம் தொடர்பான குற்றங்களை தடுக்கும் கடுமையான சட்டங்களுடன் கூடிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி கள்ளச்சாராயம் குடித்து மரணம் ஏற்பட்டால் ஆயுள் முழுக்க சிறையில் இருப்பதோடு ரூ.10 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்பது போல சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களை செய்ய பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, இதற்கு பயன்படுத்தப்படும் இடங்களையும் மூடி சீல் வைக்க வேண்டும் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

அந்த மசோதா பற்றி சட்டசபையில் பேசிய அமைச்சர் முத்துசாமி ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்தும் சூழ்நிலை இப்போது இல்லை. பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும் என்கிற விருப்பம் அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதற்கான சூழல் இப்போது இல்லை. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு கடையை மூடினால் இன்னொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள். ஆனாலும், படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம்’ என அவர் தெரிவித்தார்.

google news