Connect with us

latest news

விரைவில் மது விலக்கு?…அமைச்சர் சொன்ன அப்டேட்…

Published

on

Minister Muthusamy

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது.

இந்த மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழகத்தின் எதிர்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்திருதார். அதிமுக ஆட்சியில் மது இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தார் சீமான்.

இவர்கள் இருவரும் எதற்கு மது விலக்கில் கைகோர்த்துள்ளார் எனவும் கேட்டார். மதுக்கடைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கை எட்டிக் கொடுக்காத ஊழியர்கள் நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படுவதாகவும் சீமான் குற்றம் சாட்டியிருந்தார்.

Liquor

Liquor                                                                                                   

திருமாவளவனின் அழைப்பு குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டை பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆதிமுக என்பது மக்களின் பேராதரவைப் பெற்ற இயக்கம் என்பதால் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பங்கேற்பதா? இல்லையா? என்ற முடிவை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் எனச் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மது விலக்கு குறித்து பேசியுள்ள மது விலக்கு  ஆய்த்துறை அமைச்சர் முத்துசாமி, முதலமைச்சரால் ஓரே கையெழுத்தில் மதுக்கடைகளை மூடி விட முடியும், ஆனால் எடுத்தவுடன் எதையும் செய்து விட முடியாது என்றார்.

மதுக்கடைகள் தொடர வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எள்ளவும் விருப்பம் கிடையாது எனக் கூறியுள்ள அமைச்சர் முத்துசாமி தமிழகத்தில் படிபடியாக மது விலக்கு கொண்டு வருவோம் என்றார்.

 

 

google news