பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். கழுத்து, தலை ஆகிய இடங்களில் வெட்டுப்பட்டு ஆம்ஸ்ட்ராங்க் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
ஆனால், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிவிட்டு பைக்கில் சிலர் தப்பி செல்லும் வீடியோவும் வெளியானது. எனவே, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பி சென்றவரை போலீசார் தேடி வந்தனர். அந்நிலையில்தான், இது தொடர்பாக ஆற்காடு பாலு உட்பட 8 பேர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி ஒரு செய்தியை பதிவிட்டிருக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது.
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என அவர் பதிவிட்டிருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…