இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடியை வந்தே மாதரம் பாடல் இசைத்து அந்நாட்டு கலைஞர்கள் வரவேற்றனர்.
பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக ரஷ்யா – ஆஸ்திரியா சென்றிருக்கிறார். ரஷ்யாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இருநாடுகள் உறவு, வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று அதிகாலை ஆஸ்திரியா சென்றடைந்தார்.
ஆஸ்திரியாவின் வியன்னா சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள ஹோட்டலில் ஆஸ்திரிய வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்புக் கொடுத்தனர். அதேபோல், ஆஸ்திரிய இசைக்கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை இசைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்புக் கொடுத்தனர்.
1983-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு கடந்த 41 ஆண்டுகளில் ஆஸ்திரியா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்கிற பெருமையை இதன்மூலம் பிரதமர் மோடி பெற்றார். ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மருடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய வாழ் இந்தியர்களைச் சந்திப்பது என பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…