Categories: indialatest news

சூப்பர்மேனாக யாரும் முயற்சிக்கக் கூடாது… மோடியைத் தாக்கினாரா மோகன் பகவத்?

எப்போதும் ஒருவர் தன்னை மனிதர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்து சூப்பர் மேனாக முயற்சிக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிஜேபி – ஆர்எஸ்எஸ் இடையில் சமீபகாலமாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. பிரதமர் மோடி என்கிற தனி மனிதரின் பிம்பத்தை மட்டுமே பிஜேபி கட்டமைப்பது ஆர்எஸ்எஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

மேலும், உ.பியில் யோகி ஆதித்யநாத்தை மாற்ற வேண்டும் என்று கேசவ் மௌரியா முயற்சித்தும் அதற்கு ஆர்எஸ்எஸ் தலைமை முட்டுக்கட்டை போட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு எதிரான நடவடிக்கையாகவே இதை அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். இந்தநிலையில், ஜார்க்கண்டின் கும்லா என்கிற கிராமத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனமான விகாஸ் பார்தி ஏற்பாடு செய்திருந்த கிராம அளவிலான தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், `சுய வளர்ச்சியின் அடுத்தகட்டமாக ஒரு மனிதர், தான் சூப்பர் மேனாக வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதையும் தாண்டி விஸ்வரூபமெடுக்கவும் நினைப்பார்கள். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நாம் யாருக்கும் தெரியாது’ என்று பேசினார்.

மேலும், `மனித குல வளர்ச்சிக்காக நாம் தொடர்ச்சியாகப் பாடுபடும்போது வளர்ச்சி என்பதற்கு முடிவில்லாமல் இருக்கும். சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் நாம் தொடர்ச்சியாகப் பாடுபட வேண்டும். இந்தியாவின் இயற்கையைப் போல இந்த உலகையும் அழகான இடமாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து தொடர்ச்சியான உழைப்பைக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

AKHILAN

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

2 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

2 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

3 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

11 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

11 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

12 hours ago