latest news
புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…
தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும் அளித்து அன்றைய தினத்தில் சாமி தரிசெய்து தங்களது பிரார்த்தனைகளை வைத்தும், நேர்த்திக் கடகளை செலுத்தி வருபவர்களும் இருந்து வருகிறார்கள்.
தமிழ மாதங்களில் சில குறிப்பிட்ட சில தெய்வங்களை வணங்கும் மாதங்களாகவும் இருந்து வருகிறது. ஆடி மாதம் என்றால் அம்மன் கோவில்களில் அதிகமான பக்தர்கள் காணப்படுவார்கள். அம்மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுபவைகளாக அமைந்து வருகிறது.
அதிலும் பெண்கள் அதிகமானோர் ஆடி மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை வழிபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள்.
நவராத்திரி விரதம் பெரும்பாலும் புரட்டாசி மாதத்திலேயே வரும். இந்த நாட்களில் பகதர்கள் மாலை அணிவித்து விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை முன்வைக்கவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் கோவில்களுக்கு சென்று வந்த வண்ணம் இருப்பர்.
அதே போல இந்த குறிப்பிட்ட புரட்டாசி மாதம் பெருமாளை வழிபட உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் சனிக்கிழமை அதிக பிரசித்தி பெற்ற நாளாக இருக்கிறது பெருமாளை வழிபட நினைப்பவர்களுக்கு.
புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல மார்கழி மாத்ததிலும் பெருமாளை வழிபடுவது அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று தமிழகத்தில் அமைந்திருக்கும் முக்கிய பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.