இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு தசாப்தங்களில் மட்டும் மூன்று தலைசிறந்த கேப்டன்களை சந்தித்துவிட்டது. எம்.எஸ். டோனி, விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா. ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2007, ஐ.சி.சி. உலக கோப்பை 2011 மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2013 என மூன்று ஐ.சி.சி. கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் என்ற அடிப்படையில், எம்.எஸ். டோனி இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாக பார்க்கப்படுகிறார்.
இது ஒருபுறம் இருந்தாலும், விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் அபாரமாக விளங்கியது. வெளிநாட்டு ஆடுகளங்களில் டெஸ்ட் சீரிசை வெல்வது, இந்திய அணியை முதலிடத்திற்கு கொண்டு சென்றது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் இறுதி போட்டிக்கு விராட் கோலி இந்திய அணியை தகுதி பெற செய்திருக்கிறார்.
ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறஐயாக ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2023 ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் நிதாஸ் கோப்பைகளை வென்று இருக்கிறது.
மூவரில் யார் அதிக சாதனைகளை படைத்துள்ளனர் என்று தொடர்ந்து பார்ப்போம்.
விராட் கோலி இந்திய அணிக்காக 213 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். எம்.எஸ். டோனி 332 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ரோகித் ஷர்மா தற்போதைய இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவரை ரோகித் ஷர்மா 64 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்.
விராட் கோலியின் ஒட்டுமொத்த வெற்றி சதவீதம் 63 ஆகும். எம்.எஸ். டோனியின் ஒட்டுமொத்த வெற்றி சதவீதம் 53 ஆகும். ஒருநாள் போட்டிகளில் எம்.எஸ். டோனி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். எனினும், விராட் கோலியின் வெற்றி சதவீதம் 68 சதவீதமாகவும், எம்.எஸ். டோனியின் வெற்றி சதவீதம் 55 சதவீதமாகவும் உள்ளது.
27 போட்டிகளை பொருத்தவரையில் ஒருநாள் போட்டிகளில் ரோகித் ஷர்மாவின் வெற்றி சதவீதம் அதிகளவில் உள்ளது. 27 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை வகித்திருக்கும் ரோகித் ஷர்மா 20 போட்டிகளில் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். ஏழு போட்டிகளில் மட்டும் இந்திய அணி தோல்வியுற்று இருக்கிறது. இவரின் வெற்றி சதவீதம் 74.07 ஆக உள்ளது.
டி20 போட்டிகளை பொருத்தவரை விராட் கோலி 56 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை வகித்து இருக்கிறார். அதில் 41 போட்டிகளில் இந்தியஅணி வெற்றி பெற்று இருக்கிறது. எம்.எஸ். டோனியுடன் ஒப்பிடும் போது விராட் கோலியின் வெற்றி சதவீதம் அதிகமாக இருந்தாலும், ரோகித் ஷர்மாவுடன் ஒப்பிடும் போது கோலியின் வெற்றி சதவீதம் குறைவு தான். ரோகித் ஷர்மா இந்திய அணிக்கு 51 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில் 39 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார். இவரின் வெற்றி சதவீதம் 76.47 ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரையில் விராட் கோலி இந்திய அணிக்கு 68 போட்டிகளில் தலைமை வகித்துள்ளார். அதில் 40 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எம்.எஸ். டோனி 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை வகித்துள்ளார். அதில் இந்திய அணி 27 போட்டிகளில் தான் வெற்றி பெற்று இருக்கிறது. ரோகித் ஷர்மா ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் ஐந்து போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தனித்து நின்றிருக்கிறார்.
ஐ.பி.எல். தொடரை பொருத்தவரையில் ரோகித் ஷர்மா மற்றும் எம்.எஸ். டோனி வெற்றி பெற்றுள்ளனர். எனினும், விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏழு ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட கைப்பற்றவில்லை. எம்.எஸ். டோனி மற்றும் ரோகித் ஷர்மா தலா ஐந்து முறை ஐ.பி.எல். கோப்பைகளை தங்களது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வென்று கொடுத்துள்ளனர்.
மேலே உள்ள விவரங்களை பார்க்கும் போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விராட் கோலி அதிக வெற்றி சதவீதம் வைத்திருக்கிறார். ஆனாலும் எம்.எஸ். டோனி வென்று இருக்கும் கோப்பைகள் அவரை தனித்து நிற்க செய்திருக்கிறது. போட்டிகளில் வெற்றி சதவீதத்தை விட கோப்பைகளை வெல்வதே தனி சிறப்பு கொண்டிருக்கிறது. மேலும் இதுவே ஒருவரை லெஜன்ட் ஆகவும் மாற்றுகிறது.
அதிக வெற்றிகளை விட, கோப்பைகளே வரலாற்றை படைக்கின்றன. எம்.எஸ். டோனி ஒருநாள் போட்டிகளில் கணிசமான வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறார். எனினும், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தனித்து நிற்கிறார். ரோகித் ஷர்மா டி20 போட்டிகளில் தலைசிறந்த கேப்டனாக இருக்கிறார். எம்.எஸ். டோனி ஒரு ஐ.சி.சி. டி20 கோப்பையை வென்றிருக்கிறார். ரோகித் ஷர்மா வெற்றி சதவீதம் இந்த போட்டிகளில் மட்டும் 76.47 சதவீதம் ஆகும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…