Cricket
இந்திய கிரிக்கெட்டில் 2-வது வீரர் முகேஷ் குமார்.. வேற லெவல் சாதன படைத்து அசத்தல்..!
ஒரே தொடரில் மூன்று வகையான கிரிக்கெட்டில் களமிறங்கிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை முகேஷ் குமார் படைத்திருக்கிறார். 29 வயதான முகேஷ் குமார் தற்போது இந்திய டி20 அணியில் இடம்பிடித்துளஅளார். ஹர்திக் பான்டியா தலைமையிலான இந்திய டி20 அணி வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் முகேஷ் குமார் களமிறங்கினார். இந்த போட்டியில் இந்திய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முகேஷ் குமார் மூன்று ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டுமே கொடுத்தார். இந்த போட்டியில் அவர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் அணியில் வங்காளத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் களமிறங்கினார். 2.30 என்ற எகானமி ரேட்டில் பந்து வீசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். பிறகு பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் களமிறங்கிய முகேஷ் குமார் 22 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் விளையாடிய முகேஷ் குமார், ஒட்டுமொத்தத்தில் 15 ஓவர்களை வீசி, நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இவரது சராசரி 17.25 ஆகும். ஒரே தொடரில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் களமிறங்கி இருப்தன் மூலம் முகேஷ் குமார், தமிழக வீரரான டி நடராஜனின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
முன்னதாக 2020-21 ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட்டிலும் டி நடராஜன் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் ஒரே சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் களமிறங்கிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டி நடராஜன் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இன்டீஸ் மட்டுமின்றி ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த தொடரில் மூன்று டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த சீரிசில் இந்திய அணி கேப்டனாக, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட இருக்கிறார்.