Connect with us

govt update news

தொடரும் மோசடி..வாட்ஸ் ஆப் பிங்க் என்றால் என்ன..எவ்வாறு தப்பிப்பது?..

Published

on

whatsapp pink scam

இந்தியாவில் மோசடி கும்பல்கள் பெருகிவிட்ட நிலையில் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் ஆப் பிங்க் என்ற பெயரில் மோசடியை தொடங்க ஆரம்பித்து உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் ஏராளமான வசதிகள் இருந்தாலும் அதன் மூலம் நமக்கு சம்பந்தமான பொருட்களை இழப்பதும் அதிகம். சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தினை பறிக்கும் நோக்கத்துடன் பலர் செயல்பட்டு வருகின்றனர். அதைபோல் சமீபத்திம் வாட்ஸ் ஆப் பிங்க் என்ற செயலியின் மூலம் மக்களின் பணத்தினை பறிக்க முயற்சிகள் நடந்து கொண்டு வருகிறது.

beware of cyber criminals

beware of cyber criminals

இதன் மூலம் நமது வாட்ஸ் ஆப் அக்கெளண்டிற்கு Pink theme version உடன் புதிய வாட்ஸ் ஆப்பினை இன்ஸ்டால் செய்யும்படி ஒரு லிங்கானது அனுப்பப்படுகிறது. இதன் முகவுரையானது பிங்க் வண்ணத்தில் இருக்கும்.

இந்த செயலியானது நமது வங்கி கணக்கு, OTP மற்றும் நமது மொபைலில் உள்ள ஃபோட்டோக்கள் அன அனைத்தையும் நமக்கு தெரியாமல் திருடி கொள்ளும். 2021ஆம் ஆண்டே இந்த செயலியின் மூலம் மோசடி ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது மும்பை சைபர் கிரைம் போலிசார் இந்த மாதிரியான திருட்டில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றிய பொதுவான விழிப்புணர்வினை மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

mumbai police cyber crime wing give awareness about pink whatsapp

mumbai police cyber crime wing give awareness about pink whatsapp

இவ்வாறான மோசடியில் இருந்து தப்பிப்பதற்கு நாம் எந்த ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தாலும் அதன் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தி கொள்வது என்பது மிகவும் முக்கியம். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் இப்படியான போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆப்பிள் மொபைல் உபயோகிப்பவர்களுக்கு இதை பற்றிய பயம் தேவை இல்லை. ஏனென்றால் அவர்களின் மொபைலில் Unknown Sourceல் இருந்து எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய இயலாது. மேலும் நமக்கு எந்த ஒரு லிங்க் வந்தாலும் அது தெரியாதவர்களிடம் இருந்து வந்தால் அதை திறந்து கூட பார்க்க வேண்டால் எனவும் மும்பை சைபர் கிரைம் விங்க் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை எவ்வாறு Uninstall செய்வது?:

இந்த செயலியானது நமது மொபைலிம் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளுடன் இல்லாமல் மறைந்து காணப்படும். எனவே நமது மொபைலில் “apps” பக்கத்திற்கு சென்று “Whats app pink” என்ற பெயரில் உள்ள செயலியை Unistall செய்து கொள்ளலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *