என்னுடன் போட்டியிட்டது பெண் அல்ல ஆண்… ஒலிம்பிக்கில் வெடித்த சர்ச்சை… கதறி அழுத குத்துச்சண்டை வீராங்கனை

0
588

ஒலிம்பிக்கில் 66 கிலோ எடை பிரிவிற்கான குத்துச்சண்டை போட்டியில் ஆட்டம் தொடங்கிய 46வது நொடியில் தன்னுடன் மோதுவது ஒரு பெண்ணல்ல ஆண் தான் என வீராங்கனை ஒருவர் பாலின குற்றச்சாட்டை வைத்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினியை அல்ஜீரியாவை சேர்ந்த இமானே கலீப் எதிர்கொண்டார். இப்போட்டி தொடங்கி இமானே ஏஞ்சலாவை மூக்கில் ஒரு குத்து விட்டதாக கூறப்படுகிறது. அதை வாங்கியவுடன் ஏஞ்சலா 46வது நொடியில் தன்னுடைய ஆட்டத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

மேலும் தன்னுடன் மோதிய இமானே கலீப் பெண்ணே இல்லை என்றும், ஒரு ஆணுடன் என்னை மோத வைத்தது நியாயமற்ற செயல் எனும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இருந்தும் இமானே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்ட ஏஞ்சலா ஆட்டக்களத்திலேயே கதறி அழுதார்.

மேலும் இது குறித்து பேசிய ஏஞ்சலா அப்படி ஒரு குத்தை நான் வாங்கியதே இல்லை. என்னுடன் மோதியது பெண்ணே இல்லை. இது குறித்து ஒலிம்பிக்ஸ் கமிட்டி விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இமானே கலீப் பெண் தன்மை சோதனைகள் தோல்வி அடைந்தார். அவர் ஒரு பயாலஜிக்கல் ஆன் எனக் கூறப்பட்ட நிலையில் போட்டியில் விளையாட முடியாமல் அப்போதே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வீரரின் பாலினம் அவருடைய பாஸ்போர்ட்டை வைத்தே அடையாளப்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல் பாரிஸ் ஒலிம்பிக் பங்கெடுத்துள்ள அனைத்து வீரர்களும் முறையான மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கலந்து கொண்டுள்ளனர்.ஒவ்வொரு வீரர்களுக்கும் பாரபட்சம் இன்றி விளையாட உரிமை உண்டு. கலிப் பல வருடங்களாக உயர் மட்ட போட்டியில் விளையாடுகிறார் என்பதை கருதாமல் இந்த விவகாரம் முரணாக கருதப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here