விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக போட்டியாளர் வெற்றி பெற்ற நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா கருத்து தெரிவித்திருக்கின்றார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 29 பேர் போட்டியிட்டனர். கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்குச்சாவடியில் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்றது.
இந்த தொகுதியில் மொத்தம் 2, 37,0 31 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தார்கள். வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து காலை 6 மணிக்கு கொண்டுவரப்பட்டு 7:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இறுதியாக திமுக வேட்பாளர் 1,24,053 வாக்குகள் பெற்று அன்னியூர் சிவா வெற்றி பெற்றிருந்தார்.
இதை எடுத்து பாமக வேட்பாளர் அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றிருந்தார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா தெரிவித்திருந்ததாவது: “நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும்.
உங்கள் வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கின்றதா? கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 2000 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளோம். இது தேர்தலே இல்லை, திமுகவினர் எடுத்த ஏலம்.. வருங்காலத்தில் இடைத்தேர்தலை ஏலம் எடுத்து விடுங்கள். அதனால் தான் அதிமுகவினர் பின்வாங்கி விட்டனர். இது பணநாயகத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் மரணம்” என்று கூறியிருக்கின்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…