Categories: latest newstamilnadu

உங்களுக்கு நான் நின்னுருக்கேன்… இந்த ஒரு தடவை எனக்காக ப்ளீஸ்… அதிமுக-தேமுதிகவிடம் கெஞ்சிய சீமான்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து பிரச்சாரத்தில் இறங்கி இருக்கும் நாம் தமிழர் சீமான், அதிமுக மற்றும் தேமுதிகவிடம் ஆதரவு கேட்டு பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்கிரவாண்டி மாவட்டத்திற்கான இடைத்தேர்தல் சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்து இருக்கிறது. திமுக தரப்பில் இருந்து அன்னியூர் அ.சிவா போட்டியிட இருக்கிறார். நாம் தமிழரில் இருந்து அபிநயா போட்டியிட இருக்கிறார். மொத்தமாக 64 பேர் நாமினேஷன் கொடுத்து இருந்த நிலையில் 35 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

தற்போது 29 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து வேட்பாளருக்கான சின்னம் ஒதுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கட்சிகளும் பிரச்சாரத்தினை அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறது. நாம் தமிழர் தரப்பில் வெளிப்படையாகவே அதிமுக-தேமுதிக கட்சியிடம் ஆதரவை கேட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில், நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ஜெயலலிதா அம்மாவுக்காக அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தேன். போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுக எதிராக நின்றேன். 2014ம் ஆண்டும் பிரச்சாரம் செய்தேன். ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. உண்டியல் குலுக்கி தான் பிரச்சாரம் செய்தேன். இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நிற்கிறோம்.

நீங்க நிற்காததால் தான் கேட்கிறேன். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். தேமுதிகவிற்கும் பிரச்சாரம் செய்தேன். கடைசி நிமிடத்தில் கூட அவர்களுக்காக இருந்தேன். இப்போது அவர்கள் போட்டியில் இல்லாததால் எங்களுக்காக ஆதரவு கொடுக்க கேட்கிறேன். இந்த தேர்தலை முதலில் பார்க்கலாம். 2026 தேர்தல் கொடுத்து பின்னர் பார்க்கலாம். எங்க வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டு இருக்கிறார்.

AKHILAN

Recent Posts

விளையாட்டில் உலக அளவில் தமிழகம் சாதனை…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…

மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…

14 hours ago

நடிகர் ரஜினியின் உடல் நிலை…விரைவில் நலனடைய குவியும் வாழ்த்துகள்…

தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…

15 hours ago

தங்கம் வாங்க நேரம் இது தானா?…வீழ்ச்சியில் விற்பனை விலை…

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…

16 hours ago

உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…

16 hours ago

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…

18 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…

18 hours ago