Connect with us

latest news

ஸ்லிப் ஆனா மட்டும் தான் சிக்கல்…மத்தபடி நோ ப்ராப்ளம்…நாசா கொடுத்துள்ள அறிக்கை…

Published

on

Globe

பூமியை கடந்து மூன்று பெரிய விண்கற்கள் செல்ல இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சொல்லியிருக்கிறது. அந்த விண்கற்களுக்கு பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது.

அதிசயக்கத் தக்க பல விஷயங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டே வருகிறது. பூமி மற்றும் அதன் சுற்றுப் பாதை, வேற்று கிரகங்கள் மற்றும் வேறு கிரகங்கள் ஏதும் இருக்கிறதா? என்பதை பற்றிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு தான் வருகிறது.

பூமிக்கு நல்லது தரக்கூடிய மற்றும் ஆபத்தினை விளைவிக்கக் கூடிய விஷயங்கள் பற்றிய தேடல்களும் நடத்தப்பட்டு, அது பற்றிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வரப்படுகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா புவி பற்றிய ஆராய்ச்சிகளை அசராமல் செய்து கொண்டே தான் வருகிறது.

பூமியை கடந்து செல்ல மூன்று விண்கற்கள் தயாராக இருப்பதாக சமீபத்திய தனது ஆய்வு பற்றிய செய்தியை பகிர்ந்துள்ளது நாசா.

Globe

Globe

அதன் படி 2024 டிபி2 எனப் பெயரிடப்பட்ட 110அடி விட்டம் கொண்டிருக்கும் முதல் விண்கல் பூமியை கடந்து செல்ல இருப்பதாகவும், பூமிக்கு 7.31 லட்சம் கி.மீ. தொலைவில் இந்த விண்கல் கடந்த செல்ல உள்ளது என்றும், இப்போது வரை இதன் பயணப்பாதை சரியாகத் தான் இருந்து வருகிறதாகவும், இந்த நிலை தொடரும் பட்சத்தில் பூமிக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும் நாசா சொல்லியிருக்கிறது.

2007 யூடி3 பூமியிலிருந்து 42லட்சம் கி.மீ. தொலைவிலும் கடந்து செல்ல இருப்பதாகவும் இதனாலும் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

2020 டபுள்யூ.ஜி என அழைக்கப்பட்டும் 50 அடி விட்டம் கொண்ட மூன்றாவது விண்கல்லால் தான் பிரச்சனை வர வாய்ப்பிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. பூமியிலிருந்து 30 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில், மணிக்கு 33,947 கி.மீ. வேகத்தில் இந்த விண்கல் செல்ல இருக்கிறது.

இதன் பாதையில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அது பூமியின் மீது மோதினால், அது விழும் இடத்தில் 4 கிலோ மீட்டர் அகலத்திற்கு பள்ளம் உருவாகும் என்றும் இதனால் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. இந்த விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500 முதல் 1000 கிலோ மீட்டர் வரை எந்த கட்டிடமும் இருக்காது என்றும் எரிமலை. வெடிப்பு மற்றும் சுனாமி ஏற்பட வாய்ப்பும் உள்ளதாகவும் நாசா சொல்லியிருக்கிறது.

அதே நேரத்தில் இப்படி நடக்க வாய்ப்புகளும் குறைவே எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே இது வரை எதுவும் இல்லை, அதனால் இவை பூமியின் பக்கம் திரும்பும் வாய்ப்பு இல்லை எனவும் நாசா தனது ஆய்வு அறிக்கையில் சொல்லியிருக்கிறது.

google news