இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கமென்ட்ரி அறையில் அடிக்கும் லூட்டி எப்போதும் அனைவரின் கவனத்தை பெறும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அதுவும் இங்கிலாந்து அணி விளையாடும் போட்டி எனில், இவரின் லூட்டிக்கு துளியும் பஞ்சம் இருக்காது.
அந்த வகையில், நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் போது கமென்ட்ரி செய்து கொண்டிருந்த, தனது முன்னாள் சக வீரர் மார்க் பட்சரை நாசப் ஹூசைன் தலையிலேயே அறைந்த சம்பவம் அரங்கேறியது. 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியை, கேப்டன் என்ற முறையில் நாசர் ஹூசைன் சரியாக வழிநடத்தவில்லை என்று மார்க் பட்சர் குற்றம் சாட்டினார்.
மேலும் பிரிஸ் பேனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததற்காக பட்சர் நாசை சாடினார். கப்பா ஆஸ்திரேலியாவின் கோட்டையாக விளங்கி வந்தது. அந்த சுற்றுப் பயணத்தின் போது நாசர் ஹூசைன் அணியை வழிநடத்தினார். குறிப்பிட்ட மைதானத்தின் பிட்ச் இருந்த நிலையில், ஹூசைன் பவுலிங்கை தேர்வு செய்தது, எனக்கு நல்ல முடிவாக தெரியவில்லை என்று கமென்ட்ரி செய்த போது மார்க் பட்சர் தெரிவித்தார்.
2002 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 4-1 என்ற அடிப்படையில் கடுமையான தோல்வியை சந்தித்தது. தொடரில் முதல் சுற்றுப் பயணம் இந்த போட்டி ஆகும். அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாசர் ஹூசைன் பவுலிங்கை தேர்வு செய்தார். பிறகு, இவரின் இந்த முடிவு மிகவும் தவறான ஒன்று என்பதை உணர்த்தியது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்-இல் ஆஸ்திரேலியா அணி 492 ரன்களை குவித்தது. போட்டி முடிவில் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 384 ரன்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. இந்த சம்பவத்தை தற்போது நடைபெறும் ஆஷஸ் தொடரின், கமென்ட்ரியில் மார்க் பட்சர் பகிர்ந்து கொண்டார்.
மார்க் பட்சர் கூறுவதை பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் நாசர் ஹூசைன். பிறகு பட்சர் அருகில் வந்த நாசர் ஹூசைன், அவரது தலையில் அரைந்தார். இதை எதிர்பார்த்தவர் போன்று காட்சியளித்த மார்க் பட்சர், சிரிப்பை அடக்க முடியாமல் மனம்விட்டு சிரித்தார். மேலும் அருகில் இருந்த ரிக்கி பாயின்டிங்-ம் சிரித்தார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டு இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னணியில் உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெற இங்கிலாந்து அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…