Connect with us

latest news

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

Published

on

kulasekarapattinam

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து நவராத்திரி விரத்தை கடைபிடிப்பவர்களும் இருந்து வருகிறார்கள். தமிழகத்தில் தசரா பண்டிகை துவங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டிணம் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது நவராத்திரி விழா. குலசேகரப்படடிணம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் தசரா பண்டிகை கொண்டாட்டங்களும், நவராத்திரி விரதமும் உலகப் பிரசித்தி பெற்றது.

kulasekarapattinam function

kulasekarapattinam function

இந்த நாட்களில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு  விரதமிருந்தும், வேடங்கள் அணிந்தும்  வந்து முத்தாரம்மனை வழிபட்டுச் செல்வார்கள்.

மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இக்கோவின் தசரா கொண்டாட்டங்கள் அதிகமாக உற்று நோக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு அம்மனுக்குகாப்பு கட்டப்பட்டது. இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயிலுக்கே வந்தடைந்தது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்று அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டிணத்தில் குவிந்திருந்தனர். கொடி ஏற்றம் நடத்தப்பட்ட பிறகு பக்தர்களுக்கு காப்பு கட்டி விடப்பட்டது.

இன்று இரவு துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி வலம் வரும் வைபவம் நடை பெற உள்ளது. குலசேகரப்பட்டிண தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது.

10-ம் நாள் திருவிழாவின் போது இரவு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன், லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அன்றைய தினம் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

 

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *