Connect with us

latest news

நீங்கள் நலமா? நலத்திட்ட உதவிகள் சரியா கிடைக்குதா..? பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசிய முதல்வர்..!

Published

on

நீங்கள் நலமா உங்களுக்கு நலத்தட்ட உதவிகள் கிடைக்கிறதா? என பயனாளிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் வீடியோ காலில் பேசி கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் மக்களை தேடி மருத்துவம். இது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டது. மக்களுக்கு தொற்றா நோய்களாக இருக்கும் சக்கரை நோய், உயர் அழுத்த ரத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று மாதம் தோறும் மாத்திரை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவது தான் இத்திட்டத்தின் நோக்கம் .

இந்த திட்டத்தை தொடர்ந்து பெண்களின் சுயமரியாதைக்காக அவர்களின் உழைப்பை அங்கீகரிப்பதற்காக தமிழக அரசு கலைஞர் மகளிர் உதவித்தொகை என்ற பெயரில் திட்டம் ஒன்றை தொடங்கி அதில் மகளிர்க்கு மாதம் மாதம்  ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இப்படி செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் சரியாக மக்களிடம் சென்றடைகின்றதா? என்பதை தொலைபேசி வாயிலாக கேட்டறிவதற்கு நீங்கள் நலமாய் நின்ற திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த ஆறாம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளி ஒருவரிடம் முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ காலில் இன்று பேசியிருந்தார். மகளிர் உரிமைத் தொகையை பெறும் திட்ட பயனாளியிடம் பேசிய முதல்வர் நீங்கள் நலமா? என்று கேட்டார். மேலும் அரசு செயல்படும் திட்டங்கள் சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா? எந்த தேதியில் பணம் வருகிறது. எவ்வளவு வருகிறது, எந்த வகையாக வருகின்றது, ஏதேனும் குறை இருக்கிறதா? அரசு அலுவலகத்தில் அதிகாரிகள் நன்றாக நடந்து கொள்கிறார்களா?  என்ற பல விவரங்களை அந்த வீடியோ காலில் கேட்டறிந்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *