Connect with us

latest news

அப்படிப்போடு… இனிமே டாப் கியரில் அரசு பேருந்துகள்… ஆம்னி பஸ்களுக்கெல்லாம் டஃப் கொடுப்பாங்க போலயே…!

Published

on

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளுக்கு இணையாக புதிய வசதிகளுடன் 200 பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர்.

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 300 கிலோ மீட்டருக்கு அதிகமாக பயணம் செய்ய அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றது. வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் போன்ற காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்தாலும் அதில் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதனால் ஆம்னி பேருந்துகளை போலவே பயணிகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக போக்குவரத்துக் கழகம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. தற்போது அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக புதிதாக 200 பேருந்துகள் நவீன வசதிகளுடன் அறிமுகமாக இருக்கின்றன.

படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் கீழ்தளத்திலும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் மூலம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த பயனடைந்து வருகிறார்கள். புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த பேருந்துகள், பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேனிக் பட்டன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்விசிறி, மொபைல் போன், சார்ஜர் போன்ற அனைத்துமே இதில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் படுக்கைகள் அழுக்காவதை தவிர்க்கும் வகையில் துணிக்கு பதிலாக ரெக்ஸின் மூலம் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தலையணைகள் தொலைந்து போவதையும் பழுதாகுவதையும் தவிர்ப்பதற்காக படுக்கையிலேயே இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இளம் பச்சை வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. தற்போது வரை 200 பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் வரும் நாட்களில் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *