சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல சீசன்களாக மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தார். இருந்தும் அவர் எந்த சீசன் வேண்டும் என்றாலும் ஓய்வெடுக்கலாம் என்ற நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதை தொடர்ந்து கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தும் கடந்த சீசன் அவருக்கு பெரிய அளவு கைக்கொடுக்கவில்லை. ப்ளே ஆப் கூட செல்லாமல் சென்னை அணி தகுதி சுற்றிலே வெளியேறியது.
இதை தொடர்ந்து இந்த சீசனில் மெகா ஏலம் நடக்க இருக்கும் நிலையில் எல்லா டீம்களிலும் பல மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை அணியில் ரிஷப் பந்தினை எடுக்கலாம் எனவும் பேச்சுகள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து ரிஷப் பந்தை சென்னை டீமின் கேப்டனாகவாக மாற்றலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து சென்னை நிர்வாகம் தரப்பில் இருந்து கூறும்போது, ருதுராஜ் கெய்க்வாட் திடீரென கேப்டனாக மாறவில்லை. கடந்த 2 சீசன்களாகவே ருதுராஜை கேப்டனாக்கும் முடிவு இருந்ததாகவும், அதற்கான பயிற்சி எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் ருதுராஜை கேப்டன் பதவியில் இருந்து இறக்க வாய்ப்பே இல்லை.
தோனி வெளியேறும் பட்சத்தில் சரியான தலைமை சென்னை அணிக்கு வேண்டும் என்பதால் அந்த அணியில் பயிற்சி எடுத்த வீரராக மட்டுமே இருப்பார். இருந்தும் ரிஷப்பை டெல்லி நிர்வாகம் தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டாலும் அவரை எடுக்க கடும் போட்டி இருக்கும். அத்தனை போராடியும் சென்னை அணி ரிஷப் பந்தை அணியில் எடுத்தாலும் அவர் வீரராகவே இருப்பார் எனக் கூறப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…