தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து கொண்டே இருந்தாலும் டாஸ்மாக்கில் வருமானம் எகிறிக்கொண்டே தான் இருக்கிறது. இதில் குறைந்த காசை வைத்திருப்பவர்களையும் விடக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் புது முடிவை எடுத்துள்ளது.
டாஸ்மாக்கில் குறைந்த விலை சரக்கு தற்போது 140 ரூபாயிற்கு விற்கப்பட்டு வரும் நிலையில் கட்டிங் எனப்படும் 90 மிலி பாட்டில்கள் 80 ரூபாயிற்கு விற்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசிடம் டாஸ்மாக் தரப்பில் இருந்து ஏற்கனவே அனுமதி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. டெட்ரா பாக்கெட்களை இதை அறிமுகப்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து மது உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து விட்டு பாட்டில்களில் அறிமுகப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் மது பிரியர்கள் கூட்டணி சேர்க்க தேவை இருக்காது. அவர்களே 80 ரூபாயிற்கு வாங்கிக்கொள்ளவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளி தினத்தில் இருந்து கட்டிங்கை விற்கவும் டாஸ்மாக் முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் விற்கப்பட்டு வரும் 90மிலி டெட்ரா, மதுபாட்டில்கள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆய்வு செய்து இருக்கிறது. தெலங்கானாவில் இதற்கு பெரிய வரவேற்பு இருந்தாலும் கேரளாவில் சரியான வருமானம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இனி தமிழக குடிமகன்கள் என்ன செய்ய காத்திருக்காங்களோ என கிசுகிசு பேச்சும் எழுந்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…