latest news
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்?!.. தேசிய தலைமை ஆலோசனை!..
தமிழகத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இப்போது அண்ணாமலை இருந்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அதன்பின் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு தமிழக அரசியலுக்கு வந்தவர். இவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை வளர வைக்க வேண்டுமென முயற்சி செய்து வருகிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 10 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. எனவே, தமிழகத்தில் பாஜக தலைவர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திற்கு இப்போது புதிய பாஜக தலைவர் வரவிருக்க்கிறார்.
மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டனுக்கு செல்லவிருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் சர்வதேச அரசியல் என்கிற தலைப்பில் ஒரு படிப்பு இருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை இந்த படிப்பை படிக்க இங்கிலாந்து அரசு அழைப்பு விடுக்கிறது. அதன்படியே பாஜகவில் இருந்து அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வருகிற ஆகஸ்டு மாதம் செல்லும் அவர் அடுத்த வருடம் துவக்கத்தில் தமிழகம் திரும்புகிறார். 4 மாதம் அங்கு அவர் தங்கி அதை படிக்க வேண்டும் என்பதால் தற்காலிகமாக ஒருவரை தமிழகத்தின் பாஜக தலைவராக நியமிக்கலாம் என பாஜக தேசிய தலைமை ஆலோசனை செய்து வருகிறது.
நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், ஏபி முருகானந்தம், கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர்களில் யாராவது ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.