Cricket
மிரட்டல் விடுத்துள்ள மந்தனா!..இனி இவங்க தான் நம்பர் ஒன்னு…
சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இந்திய மகளிர் அணியும், தனது அபார திறமையால் மற்ற நாட்டு அணிகளுக்கு நெருக்கடி குடுக்கக் கூடிய அணியாக உருவெடுத்து வருகிறது. உள்நாட்டு தொடர் மட்டுமல்லாமல் வெளிநாட்டு போட்டிகளிலும் தங்களது திறமையை சரிவர வெளிப்படுத்தி வருகின்றனர் இந்திய பெண்கள் அணியினர்.
சாம்பியன் பட்டத்தினை வெல்வார்கள் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சமீபத்தில் அரையிறுதிக்கு கூட தேர்வாகாமல் அதிர்ச்சியை தந்தது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக் கோப்பையின் போது. ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இந்த கவலையை நேற்று மறக்கடிக்கச் செய்து விட்டனர் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஒரு நாள் போட்டி தொடரை வென்று காட்டியதன் மூலம்.
நேற்றைய போட்டியில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருந்தார் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
அவரது பொறுப்பு கலந்த அதிரடியான ஆட்டம் இந்திய அணி, நியூஸிலாந்து அணி நிர்ணயித்துக் கொடுத்த இலக்கினை எளிதாக அடைய உதவியது, அதோடு 2 – 1 என தொடரை வெல்லவும் காரணமாக அமைந்தது. மஹாரஷ்ட்ரா மாநிலம் மும்பையில் ஜூலை மாதம் 18ம் தேதி 1996ம் வருடம் பிறந்தார் ஸ்மிருதி மந்தனா. இடது கை பேட்ஸ்மேனான இவர் வலதுகை மித வேக பந்து வீச்சாளரும் கூட.
நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் ஸ்மிருதி மந்தனா, இந்திய அளவிலான மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். ஏழு சதங்கள் அடித்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என மிதிலி ராஜின் சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் அதிக சதமடித்துள்ள வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஐசிசி தரவரிசையில் ஒரு நாள் போட்டிகளுக்கான பட்டியலில் 705 புள்ளிகளுடன் 4வது இடத்திகும், 736 புள்ளிகளுடன் 5 வது இடத்திலும் இருந்து வருகிறார் ஸ்மிருதி மந்தனா. அவரது சாதனைக்கு இந்திய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 6 சதங்கள் அடித்து ஹர்மீத் கவுர் இந்திய அளவில் அதிக 3வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.