புது ஐபிஎல் விதிமுறைகளால் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்றோர் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல்-இன் 18 வது சீசன் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருக்கின்றது. ஐபிஎல் 18 வது சீசனுக்கு முன்பாகவே ஐபிஎல்-லில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியினரும் தங்களது அணிக்காக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதில் ஒரு வீரர் அண்ட் கேப்ட்டு வீரராக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. 6 வீரர்களில் யார் யாரை எத்தனை கோடிக்கு தக்க வைக்க வேண்டும் என்பது குறித்தும் விதிமுறை கொடுக்கப்பட்டது.
அதிகபட்சமாக ஒரு வீரருக்கு 18 கோடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஒரு அணியில் 18 கோடி மதிப்பில் இரண்டு வீரர்களையும், 14 கோடி மதிப்பில் இரண்டு வீரர்களையும், 11 கோடி மதிப்பில் ஒரு வீரரையும், நான்கு கோடி மதிப்பில் அன்கேப்ட்டு வீரர் ஒருவரையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது. இப்படி 6 வீரர்களை தக்க வைக்க முடியும்.
ஒவ்வொரு அணியினரும் தங்களது அணியில் 6 வீரரை தக்க வைத்துக் கொள்ள 75 கோடி செலவு செய்ய வேண்டும். இந்நிலையில் 75 கோடி ரூபாயை இனி விதிமுறைப்படி செலவு செய்ய தேவை இல்லை. 75 கோடி மதிப்பில் 6 வீரர்களை யாரை வேண்டுமென்றாலும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்து இருக்கின்றது. அதாவது ஒரு வீரருக்கு நீங்கள் 30 கோடியை கொடுத்து கூட தக்க வைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்து இருக்கின்றது.
இந்த விதிமுறை காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு குறைந்த தொகையும், மற்ற வீரர்களுக்கு கூடுதல் தொகையும் கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் டெல்லி கேப்பிடல் அணியில் ரிஷப் பந்த்-க்கு குறைந்த தொகையும் மற்ற வீரர்களுக்கு அதிக தொகையும் கொடுக்கவும் முடியும்.
இந்த தொகையை வாங்க மறுத்து ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்றவர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. அனைத்து அணிகளும் பிசிசிஐயின் இந்த புதிய விதிமுறைக்கு சம்பந்தம் தெரிவித்திருப்பதால் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…