Cricket
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது… இந்திய பயிற்சியாளரான பின் ஆட்டத்தை ஆரம்பித்த கம்பீர்…
இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கையுடன் நடைபெற்று வரும் தொடரில் மூன்றாவது டி20 போட்டியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் இதற்கு கம்பீர் மறுத்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முன்னாள் அதிரடி வீரரான கௌதம் கம்பீர் தன் மனதில் பட்ட விஷயங்களை எந்த இடத்தில் இருந்தாலும் நேரடியாக பேசக்கூடியவர். இது அவருடைய பல பேட்டிகளில் அப்பட்டமாக வெளிப்படும். இதனால் அவருக்கு ரசிகர்களிடமிருந்து பெரிய அளவில் விமர்சன குரலும் வந்திருக்கிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பின் இந்திய அணி முதல் டி20 போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. பொதுவாக இது போன்ற சூழலில் மூன்றாவது போட்டியில் இளம் வீரர்களை இறக்குவது தான் வழக்கம். இதையே பிசிசிஐ கம்பீரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறது. ஆனால் கம்பீர் இந்த நடவடிக்கைக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
தொடரினை கைப்பற்றினாலும் இருக்கும் எல்லா போட்டிகளையும் வெல்வது தான் முக்கியம் எனவும் முடிவு செய்து இருக்கிறாராம். இதனால் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. பந்துவீச்சாளர்களில் தேவைக்கு ஏற்ப சில மாற்றம் மட்டுமே ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. போட்டியில் தான் யார் தற்போது அணியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனக் கூறப்படுகிறது.