Cricket
இந்தியாவிடமிருந்து வெற்றியை பறித்த நியூஸிலாந்து!…இது எத்தனையாவது வெற்றி தெரியுமா?…
இந்தியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல்
டெஸ்ட் மேட்சில் அபார வெற்றி பெற்றுள்ளது நியூஸிலாந்து. இன்னிங்ஸ் தோல்வி கிடைத்து விடுமோ? என நினைக்கப்பட்ட நேரத்தில் சர்பராஸ்கானின் சதமும், பண்டின் அதிரடியும் இந்தியாவை காப்பாற்றியது.
முதல் இன்னிங்ஸில் வெறும் நாற்பத்தி ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிலைத்து நின்று ஆடியது. ஆனாலும் பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது. நியூஸிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியோடு சேர்த்து நியூஸிலாந்து இந்தியாவிற்கு எதிரான தனது 14வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இது வரை இந்த அணிகள் எத்தனை டெஸ்ட் மேட்சுகளில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன தெரியுமா?. பெங்களூருவில் நடந்து முடிந்த போட்டியோடு சேர்த்து இதுவரை 63 முறை மோதல் நடைபெற்றிருக்கிறது.
இதில் இருபத்தி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தான் முன்னிலை வகிக்கிறது. இன்றைய வெற்றியோடு சேர்த்து நியூஸிலாந்து 14வெற்றிகளை குவித்திருக்கிறது.
27 முறை இரு அணிகளும் டிரா செய்துள்ளது.பெங்களூரு டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்த இரு அணிகளும் 2021ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் மோதியிருந்தன. இதில் இந்தியா 372ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து ஆதீக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக நடந்து முடிந்த 6 போட்டிகளில் இந்தியா 1 வெற்றியையும், நியூஸிலாந்து நான்கு வெற்றிகளையும் பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்திருந்தது.