Connect with us

Cricket

இங்கேயும் நியூஸிலாந்தா?…தென்னாப்பிர்க்காவுக்கு இதுவே வேலையா போச்சே!…

Published

on

New Zealand

இந்திய அணிக்கு எதிரான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கடைசி பந்து வரை போராடியும் தோல்வியை தழுவியது. இந்திய அணி உலகக் கோப்பையை வென்று மகிழ்ச்சியை தந்திருந்தாலும், அந்நாட்டு ரசிகர்கள் கூட தென்னாப்பிரிக்க அணியின் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றை நினைத்து வருந்தும் அளவில் தான் இருந்தது அப்போது.

ஆண்கள் அணி உலகக் கோப்பை தொடரில் காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் தோல்வியைத் தழுவி வருவது தொடர்கதையாகி வருகிறது, அந்நாட்டு பெண்கள் அணியாவது இந்த வழக்கத்தினை மாற்றி அமைத்து ஆறுதல் தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்களும் எங்கள் நாட்டு ஆண்கள் அணியைப் போலத்தான் என நிரூபித்து விட்டனர் தென்னாப்பிரிக்க நாட்டு மகளிர் கிரிக்கெட் அணி.

அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியாவை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மிரட்டலான வெற்றியை பெற்றிருந்ததால்,தென்னாப்பிரிக்க பெண்கள் அணியின் மூலமாக அந்நாட்டவர்களின் உலகக் கோப்பை கனவு சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தவிடு பொடியானது, நேற்று துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியின் மூலம்.

World Cup

World Cup

இருபது ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டி தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடந்து வந்தது.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தேர்வாகியிருந்த நிலையில், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.

முதலில் பேட்டிங் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப் பட்ட 20ஓவர்களில் 5விக்கெட்டுகளை இழந்து 158ரன்களை குவித்தது. பின்னர் 159ரன்கள் எடுத்தால் வெற்றி என சேஸிங்கை துவங்கிய தென்னாப்பிரிக்க அணி 20ஓவர்களில் 126 ரன்களை மட்டுமே எடுத்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவி 2020ம் ஆண்டு உலகக் கோப்பையை தவற விட்டது.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்தி சாதனை புரிந்திருந்த நிலையில் அந்நாட்டு மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக் கோப்பையை வென்று அசத்தியுள்ளனர்.

google news