குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…

சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் தங்கத்தின் விற்பனை விலையில் நாள் தோறும் மாற்றங்கள் காணப்படும் நிலை இருந்து வருகிறது. தங்கம் என்பது இந்தியா போன்ற நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகறது. சடங்குகளில் வழங்கப்படும் முக்கியத்துவத்தின் காரணத்தால் இதற்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. கிராம் ஒன்று ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.7,000/-) விற்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது விலை. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலேயே காணப்பட்ட தங்கம் திங்கட்கிழமையான இன்று இறங்கு முகத்தை சந்தித்துள்ளது.

கிராம் ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம் இன்று.

Silver and Gold

ஒரு கிராம் ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7.095/-) விற்கப்பட்டு வந்த நிலையில் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து இன்று ஏழாயிரத்து என்பது ரூபாய்க்கு (ரூ.7,080/-)விற்பனையாகிறது. சவரன் ஒன்றின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ. 56,640/-) விற்பனையாகி வருகிறது.

வெள்ளி கிராம் ஒன்றிற்க்கு பத்து காசுகள் குறைந்து நூறு ரூபாய் தொன்னூறு காசுகளுக்கு (ரூ0.90/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து தொல்லாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,00,900/-) விற்கப்படுகிறது இன்று.

கடந்த சில நாட்களாகவே விலை உயர்வை சந்தித்து அதிர்ச்சியளித்து வந்த தங்கத்தின் விலை இன்று இறங்கமுகத்திற்கு வந்து ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த விலை குறைவு தொடருமா? என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஆபரணப்பிரியர்கள் மத்தியில்.

 

 

 

sankar sundar

Recent Posts

பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…

58 mins ago

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…

1 hour ago

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…

2 hours ago

வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!

தமிழ்நாட்டில் நில உரிமையாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. பட்டா எனப்படும் இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட இடத்தின்…

2 hours ago

சூப்பர் மேனாக ரோகித்.. சூப்பர் கேட்ச் பிடித்து அசத்தல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது…

2 hours ago

ஐபிஎல் 2025: RCB ஜெயிக்க இதை செய்யனும்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஐபிஎல் 2025 குறித்த ஆலோசனை கூட்டம்…

3 hours ago