தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மறைந்த விஜயகாந்த் என தமிழகத்தின் மிகப்பெரிய திரைக்கலைஞர்களாக பார்க்கப்பட்டவர்கள் பின்னாட்களில் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு அதில் உச்சத்தை அடைந்தும் இருந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அரசியல் ஆசையால் சினிமாவிலும், அரசியலிலும் ஜொலிக்க முடியாமல் பின்னடைவை சந்தித்த நபர்களையும் தமிழகம் பார்த்து வந்திருக்கிறது.
தமிழகத்தின் தற்போதைய முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய் ஆகியோரும் தங்களை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட்டும் இருக்கிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கினார் விஜய். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தான் தன்னுடைய கட்சிப் பணிகள் தீவிரமடையும் என தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்தே தனது காய் நகர்வுகளை செய்து வருகிறார் விஜய் தற்போது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்து வந்தார். நீட் தேர்வு குறித்தும் மேடைகளில் பேசத் துவங்கினார். இப்படி அரசியலில் சுறுசுறுப்பை காட்ட துவங்கி விட்டார் விஜய்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடியிருக்கிறார். அவரை சந்தித்து வாழ்த்த கட்சி நிர்வாகிகள் திரளாக சென்றிருக்கினர். அவர்களுடனான கலந்துரையாடலின் போது புஸ்ஸி ஆனந்த் கட்சியின் கொடி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்ததாக தகவல் வெளியானது.
அறிக்கைகள், கள விஜயங்கள் என அரசியலில் மேற்கொண்டு வரும் விஜய் சினிமா பாணியில் தனது கில்லி ஆட்டத்தை வெகு விரைவில் தனது அரசியலிலும் காட்டுவார் என அவரது ரசிகர்களும், கட்சி உறுப்பினர்களும் எதிர் நோக்கி காத்திருப்பர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…