சமீபத்தில் இந்தியாவில் வைத்து நடந்து முடிந்த ஐம்பது ஓவர் உலக்கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய தற்போதைய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியில் இடமிருக்காது என செய்திகள் வலம் வந்தது. இதை எல்லாம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா மறுத்தார். கோலி, ரோஹித் சர்மா இருவரும் இருபது ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பார்கள் என சொல்லியிருந்தார்.
அவர் சொன்னது போலேவே இந்திய இருபது ஓவர் உலகக் கோப்பை அணிக்கு ரோஹித் சர்மா தலைமை வகித்தார். இந்திய அணி அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டியில் பலமிக்க தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மா,விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச் இருபது ஓவர் போட்டிகளிலிருந்து தங்களது ஓய்வினை அறிவித்தனர். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவடைந்ததால், தலைமை பயிற்சியாளாராக முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த ஒரு நாள் போட்டி தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இவர்கள் மூன்று பேரும் அணியில் இடம்பெற வேண்டும் கம்பீர் விரும்பினார்.
இப்போது ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒரு நாள தொடரில் விளையாட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் ஹிட்-மேன் ரோஹித் சர்மாவின் அதிரடியை இலங்கையில் இந்திய ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…