Categories: latest newstamilnadu

வச்சி செய்யப்போகுதாமே வடகிழக்கு பருவ மழை!…தப்புமா தென் தமிழகம்?…

தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் பயனடைந்தது. அதிகமான மழை பொழிவு முன்னைக் காட்டிலும்  இருந்ததாக புள்ளி விவரங்கள் சொல்லியிருந்தது. சராசாரிக்கும் அதிகமாக மழை பெய்து வெப்பத்தை குறைய வைத்து சில இடங்களை குளிரூட்டியது. வட கிழக்கு பருவ மழையை அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறது தமிழகம்.

இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை குறித்த முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தாண்டு அதிகமான தாக்கம் இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

வழக்கத்தை விட இம்மாநிலங்களில் மழைப்பொழிவானது அதிகமாவே இருக்கும் என்றும் எப்போதும் பெய்யும் மழையின் அளவினைக்காட்டிலும் இந்தாண்டு நூற்றி பதினோரு சதவீதம் அளவில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.

Rainfall

இதனைப் போல வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், தமிழகத்தில் இந்தாண்டு முன்னெப்போதையும் விட அதிகமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தென் தமிழகத்தினை பொறுத்த மட்டும் மழைப் பொழிவு சற்று குறைவாகவே இருக்கும் என சொல்லியிருந்தார்.

கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தென் தமிழகத்தில் இந்தாண்டு மழை பொழிவு குறைவாக இருக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்திருப்பது சிந்திக்க வைத்துள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து நீர் நிலைகளில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும்போது தென் தமிழகத்தின் நிலைமை இந்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என யோசிக்க வைத்துள்ளது.

 

sankar sundar

Recent Posts

ரஜினிகாந்த் உடல் நிலை…பிரதமர் மோடி ஆர்வம்…விஜய் வாழ்த்து…

தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமழ் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டு…

29 mins ago

தோல்வியடைந்த திமுக அரசு…பலமான கூட்டணி அமையும் தமிழிசை நம்பிகை..

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து…

1 hour ago

சொந்த வீடு வாங்க ரூ. 9 லட்சம் வரை கடன்.. இந்தத் திட்டம் பற்றி தெரியுமா?

பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ்…

2 hours ago

சொந்த தொழில் தொடங்க ரூ. 50,000 கடன்.. ஈசியா வாங்குவது எப்படி?

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன்…

2 hours ago

ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…

நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட  இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம்…

2 hours ago

தன் அணிக்கு அட்வைஸ் கேட்ட முன்னாள் வங்கதேச வீரர்.. மைக்கில் வைத்து பங்கம் செய்த சுனில் கவாஸ்கர்

கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது…

3 hours ago