Connect with us

latest news

ஸ்கூல் ஸ்டூடண்சுக்கு குட் நியூஸ்!…ஆறாம் தேதி வரை கொண்டாட்டம் தானா?…

Published

on

School

தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் சார்பில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்லாம் காலாண்டுத் தேர்வு முடிவடைந்த உடன் ஒன்பது நாட்கள் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு இந்த நிலையிலிருந்து மாற்றம் இருந்ததால் விடுமுறையை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் ஆலோசித்து இது குறித்த முடிவினை அறிவிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லியிருந்தார்.

School Re-opening

School Re-opening

இந்நிலையில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வரை நீட்டித்து உத்தவிட்டுள்ளது அரசு. நடப்பாண்டில் செப்டம்பர் இருபத்தி எட்டாம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை துவங்கி பின்னர் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதியோடு விடுமுறை காலம் முடிவடைந்து மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது முன்னதாக.

ஐந்து நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்படிருந்த நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை, இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இரண்டு நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறை இருப்பதாகவும், இதனால் இதனை நீட்டிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

செப்டம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வரை விடுமுறை நாட்கள் இருக்கும் என்றும் அக்டோபர் மாதம் ஏழாம் தேதியான திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் இயங்கத்துவங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news