Connect with us

latest news

அடேங்கப்பா ஆம்னி பஸ் டிக்கெட் இவ்ளோவா?…அப்செட் ஆக வைத்த விலை?…

Published

on

Omni Bus

தமழகத்தின் தலை நகரமான சென்னைக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காகவும் பிற காரணங்களுக்காகவும் வந்து பின்னர் சென்னை வாசிகளாகவே மாறி இருக்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் பொழுதை கழித்தும், பண்டிகைகளை மகிழ்ச்சியுடனும் கொண்டாடியும் விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இதேபோல தொடர் விடுமுறைகள், திருமண மற்றும் சுப, துக்க நிகழ்வுகளுக்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

Bus Travel

Bus Travel

பண்டிகை கால நேரங்களில் பயணிகளின் வசதிகளுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும். ஆனாலும் தனியார் ஆம்னி பஸ்களில் பயணத்தை மேற்கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.

எப்படியாவது குறித்த நேரத்தில் ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை கூடுதல் விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டாலும் அதனைப் பற்றி கவலைப் படாமல் பயணம் செய்பவர்களும் உண்டு.

தற்போது சனி, ஞாயிறு மிலாது நபி பண்டிகை, முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதால் தொடர் விடுமுறைகள் வருகிறது. இந்த நேரத்தில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணங்கள் இயல்பை விட இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிளாம்பாக்கம் பேரூந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு மூவாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூறு ரூபாய் (ரூ.3990/-) டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுறது. இதே போல நாகர்கோவிலுக்கு அதே மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஊடக செய்திகள் சொல்லியுள்ளது. இந்த டிக்கெட் விலையின் திடீர் உயர்வு பயணிகளை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளது.

google news