தமிழ வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கி தனது அரசியல் வாழ்விற்கான முதல் படியில் அடி எடுத்து வைத்தார் நடிகர் விஜய். தன்னுடைய திரைப்படங்களின் மூலம் அரசியல் குறித்த பஞ்ச் டயலாக்குகளை வைத்தே தனக்கு அரசியல் மீதான ஆசை உண்டு என்பதை சொல்லி வந்திருக்கிறார் முன்னரே.
‘டீனேஜ் கவர்மென்ட்டின் சீஃப் மினிஸ்டர் நீ’ என தனது படத்தில் பாடலை வைத்தவர் இவர் அப்போதே. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை கவனத்தில் வைத்து கட்சியை துவங்கியுள்ள விஜய், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி பங்கேற்காது, யாருக்கும் தனது ஆதரவு கிடையாது என்பதை துவக்கத்திலேயே திட்டவட்டமாக அறிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தனது கட்சியின் அடுத்த அடுத்த கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்பதையும் சொல்லியிருந்தார். சொன்னதன் படியே இப்போது கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய்.
விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.
படம் வெளிவந்த பிறகு தனது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் விதமாக மாநாடுகளை நடத்தவும் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. மக்களை நேரடியாக சென்று சந்திக்கும் விதமாக நடை பயண நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டம் வகுக்கப்படுவதாகவும் இந்த தகவல் தெரிவிக்கிறது.
நீட் தேர்வு எதிர்ப்பு மூலம் பாஜகவின் மீதான தனது எதிர்ப்பை மறைமுகமாக விஜய் காட்டியுள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் இது வரை நாற்பத்தி எட்டு லட்சக் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக தங்களை இணைத்துள்ள நிலையில் கட்சியில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
விஜய் அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றிய இந்த செய்திகளை பிரபல தமிழ் நாளிதழ் தனது வலைதள பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…