Categories: Cricketlatest news

எப்படி இந்த மாதிரி செய்ய முடியும்? ஹர்மன்பிரீத் கவுரை கேள்விகளால் துளைத்த நிகர் சுல்தான்..!

இந்தியா மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. தொடரின் இறுதி போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அவுட் ஆனதற்கு பிறகு செய்த காரியம், போட்டிக்கு பிறகு நடைபெற்ற போட்டோ செஷனில் நடந்து கொண்ட விதம் சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

போட்டியில் அவுட் ஆனதும், அதிக கோபமுற்ற ஹர்மன்பிரீத் கவுர் ஸ்டெம்ப்-களை பேட்டால் அடித்தார். இதோடு கோப்பை பகிர்ந்து கொள்வதற்காக இரு அணிகளும் கூடிய இடத்திற்கு அம்பயர்களை அழைத்து வருமாறு வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் நிகர் சுல்தானாவிடம் கூறியது போன்ற செயல்பாடுகள் ஹர்மன்பிரீத் கவுர் கிரிக்கெட் நடத்தைக்கு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தி விட்டது.

Nigar-Sultana-Joy

இவரின் செயல்பாடுகள் காரணமாக இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, ஐ.சி.சி. சார்பில் டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டு உள்ளன. போட்டிக்கு பிந்தைய போட்டோஷூட்டின் போது ஹர்மன்பிரீத் கவுர் செயல்பாடுகள் காரணமாக வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி, குழு புகைப்படம் எடுக்காமல் அங்கிருந்து வெளியேறியது.

போட்டிக்கு பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் நிகர் சுல்தானா, மனம் திறந்து தன்தரப்பு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் எப்படி எங்கள் அணிக்கு எதிராக இப்படி செய்ய முடியும் என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..,

“விளையாட்டின் போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் சரியான வாதம் தான். மேலும் இவ்வாறு நடைபெறுவது முதல்முறையும் கிடையாது. அந்த சூழலில் தான் இவ்வாறு நடைபெற்றுவிட்டது என்று நீங்கள் சொல்வதும் சரியான ஒன்று தான். எனினும், இவை அனைத்தும் விளையாட்டு களத்துடன் முடிந்திருக்க வேண்டும்.”

Nigar-Sultana-Joy-1

“வெளிப்படையாக பேச வேண்டுமெனில், அந்த சம்பவம் எனக்கு மோசமாகவோ அல்லது அது என்னை ஏமாற்றம் அடையவோ செய்யவில்லை. நான் எனது வீரர்களிடம், இதுபோன்ற சம்பவங்கள் போட்டியின் முக்கிய சூழலில் நடைபெறுவது சாதாரன விஷயம் தான் என்று கூறி இருப்பேன். மேலும் அதோடு, அந்த சம்பவத்தை கடந்து வந்துவிட வேண்டும்.”

“இந்த சம்பவம் போட்டியோடு முடியாமல் போனது தான், உண்மையில் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நான் ஒன்றை கூறிக் கொள்கிறேன். எனது வீரர்களுக்கும் கூட, ஹர்மன்பிரீத் போட்டியில் லெஜன்ட் ஆவார். மற்ற வீரர்கள் அவரை எதிர்நோக்குவர், அவரை போன்ற லெஜன்ட் எப்படி எங்களிடம் இப்படி நடந்து கொள்ள முடியும். எனக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தியதோடு, ஏமாற்றத்தை அளித்தது. இது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்திவிட்டது.”

“இந்த போட்டிக்கு வந்த அம்பயர்கள் தான் டி20 தொடரிலும் பணியாற்றினர். அதில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டிகளும் மிகவும் நெருக்கானவை ஆகும். நாங்கள் தோல்வுற்றதும், இன்னும் சிறப்பாக விளையாடி போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றே எனக்கு தோன்றியது. ஆனால் தற்போது இது விஷயமே இல்லை.”

“இதே அம்பயர்கள் தான் டி20 தொடருக்கும் பணியாற்றினர். ஆனால் அப்போது இந்திய அணி எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் தொடரை வென்றது தான் இதற்கு காரணமா? வீரராக, அம்பயர் முடிவு தான் இறுதியானது என்றே கற்பிக்கப்பட்டு இருக்கிறது, மேலும் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்துள்ளனர்.”

“நானும் அப்படியே கேட்கிறேன்- இறுதி ஒருநாள் போட்டியில் அவர்கள் வென்றிருந்தால், அவர்கள் அம்பயரிங் சார்ந்த பிரச்சினைகளை எழுப்பி இருப்பார்களா அல்லது சீரிசை வெல்ல முடியாததால், ஏமாற்றம் அடைந்து, முடிவு குறித்த கோபம் காரணமாக அவர்கள் இப்படி செய்தார்களா?,” என்று தெரிவித்தார்.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago