Categories: latest newstamilnadu

வர 21 ஆம் தேதி… எல்லாரும் ஆஜர் ஆயிடுங்கப்பா!… கைலாசா எங்க இருக்குன்னு நித்தியானந்தா சொல்ல போறாரா..?

வரும் 21ஆம் தேதி கைலாச நாடு எங்கு இருக்கின்றது என்பது குறித்து அறிவிக்கப்போவதாக நித்தியானந்தா தெரிவித்திருக்கின்றார்.

சர்ச்சை சாமியார் என்று அழைக்கப்பட்டு வரும் நித்தியானந்தா கைலாய நாடு என்று தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார். அந்த நாடு பற்றிய பரபரப்பு தற்போது வரை ஓய்ந்தபாடில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாட்டுக்குச் சென்ற நித்தியானந்தா இந்துக்களுக்காக கைலாச என்ற ஒரு நாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த நாட்டுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கின்றது, ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன என்று தெரிவித்திருந்தார்.  கைலாச நாடு சார்பில் பல நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறி இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் அவரின் சிஷ்யர்கள் பதிவிட்டு இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கைலாச நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

இப்படி இருக்கும் சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசாவை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கைலாச சார்பில் பெண் பிரதிநிதிகள் பேசப்பட்டது விரைவில் நீக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அறிவிக்கப்பட்டது. இல்லாத ஒரு நாட்டின் பெயரில் நித்தியானந்தாவும் அவரது சிஸ்டியர்களும் ஒரு பிம்பத்தை உருவாக்கி பலரையும் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் வருகிற 21ஆம் தேதி கைலாச நாடு எங்கு இருக்கின்றது என்பது குறித்து நித்தியானந்தா அறிவிக்க போவதாக கூறியிருக்கின்றார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் கைலாச நாடு திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21ஆம் தேதி குரு பூர்ணிமா நன்னாளில் கைலாசாயிருக்கும் இடத்தை அறிவிக்க போகிறோம்.

எங்கள் நாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம் என்று கூறி இருக்கின்றார். மேலும் கைலாசம் வாசியாக இப்போது பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிடப்பட்டுள்ளது .அதன்படி வருகிற 21ஆம் தேதி நித்யானந்தா கூறிவரும் கைலாசநாடு எங்கு இருக்கின்றது என்பது தெரிந்துவிடும். உண்மையாக கைலாசா என்ற நாடு இருக்கின்றதா இல்லை மக்களை ஏமாற்ற இவர்களை கதை கட்டி வருகிறார்களா? என்பது தெரிந்துவிடும்

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago