govt update news
வேலை வேனுமா?..இந்திய பட்டதாரிகளுக்கு அடிக்குது அதிர்ஷ்டம்..என்னனு தெரியுமா?..இத வாசிங்க..
இந்தியாவில் வாழும் பல பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது இலட்சியமாகவே உள்ளது. இப்படி நினைப்பவர்களுக்காக ஆஸ்திரேலியா நாடானது தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அங்கு சென்று பணிபுரிபவர்களுக்கு ஒரு முக்கியமான சலுகையை வழங்கியுள்ளது.
இதன்படி ஜுலை 1 முதல் இந்திய பட்டதாரிகள் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது விசாக்களை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர்கள் விசா இல்லாமல் 8 ஆண்டுகள் வரை அங்கு பணிபுரிந்து கொள்ளலாம் என அந்த நாடானது தற்போது அறிவித்துள்ளது. இந்த சலுகையானது MATES(Mobility Arrangement for Talented Early-Professionals Scheme) என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையே உள்ள ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையின் மூலம் வருடத்திற்கு 3000 இடங்களை இந்தைய இளம் பட்டதாரிகளுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் மேலும் இவர்களுக்கு 2 ஆண்டுகள் விசா தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இன்ஜினியரிங், இன்ஃபார்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ், ஃபினான்சியல் டெக்னாலஜி, ரினிவபில் எனெர்ஜி மற்றும் மைனிங் போன்ற துறைகளில் பயின்றவர்கள் இந்த இந்த வகை சலுகைகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
நிபந்தனைகள்:
- விண்ணப்பதாரர்கள் 31 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்ட படிப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.
- சமீபத்தில் படிப்பினை முடித்தவராக இருத்தல் வேண்டும்.
- தங்களது தொழிலை தற்போது தொடங்குபவராக இருத்தல் வேண்டும்.
இந்த MATES விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?:
- தங்களது தகுதியை முதலில் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
- ஆங்கில தகுதி தேர்வினை எழுத வேண்டும்.
- திறன் மதிப்பீட்டு தேர்வினை எழுத வேண்டும்.
- தங்களது EOI(Expression of Interest)ஐ பதிவு செய்ய வேண்டும்.
- தங்களது ITA(Invitation to Apply) எனப்படும் அழைப்பினை பெற வேண்டும்.
- விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பகுதி நேர வேலை செய்பவர்களின் 2 வாரத்திற்கான வேலை நேரத்தை 40 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. இந்த வகை மாணவர்களின் விசா காலம் 2 ஆண்டுகள் ஆகும்.