வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. அதிலும் அமெரிக்கா, கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதை பலர் தீர்மானமாகவே வைத்திருப்பர். அப்படிபட்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. அதற்கு முதலில் H-1B விசா எனப்படும் விசாவை பற்றி பார்ப்போம்.
H-1B விசா:
H-1B விசா என்பது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாடுகளுக்கு பிற நாடுகளில் உள்ள வேலை தேடுபவர்கள் அல்லது பணியில் இருப்பவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் நாடுகளுக்கு சென்று வேலை பார்க்குமாறு அனுமதி வழங்குவர். H-1B விசா வைத்திருப்பவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.
தற்போது இந்த வகை விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளுக்கு சென்று வேலையில் ஈடுபடலாம் என அந்த நாடுகள் அறிவித்துள்ளன. சமீபத்தில் நமது பாரத பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பயணத்தின் போது அமெரிக்க நாடானது இந்த வகை விசா வைத்திருப்பவரிகளுக்கான விதிமுறைகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்த விசாக்களை அமெரிக்காவிலேயே புதுப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
இதைபோல் கனடா நாடும் அமெரிக்க H-1B வகை விசா வைத்திருப்பவர்கள் 10000 பேர் தங்கள் நாட்டில் வந்து பணி புரியலாம் எனவும் அறிவித்துள்ளனர். வரும் ஜுலை 16ஆம் தேதி முதல் அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்கள் கனடாவிற்கு சென்று பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்கள் 3 ஆண்டுகளுக்கு பணிபுரியவும் அனுமதிக்கப்படுவர். பணிபுரிபவரின் குடும்பமும் தற்காலிக அடிப்படையில் அங்கு இருக்கலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
மேலும் அங்கு சென்று பணிபுரிபவர்களுக்கு பல திட்டங்களை இந்த வருட இறுதியில் அமல்படுத்தப்போவதாகவும் கனடா அமைச்சர் சேன் ஃப்ரஸர் தெரிவித்துள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…