அடி தூள்..இனி கவலையே இல்ல..எங்கு வேண்டுமானாலும் பே பண்ணிகலாம்..மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்ட தனியார் வங்கி..

உலகளவில் தற்போது வங்கி சேவை என்பது மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் நெட்பாங்கிங், யூபிஐ வசதிகள், மொபைல் பாங்கிங், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் என நாம் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய்அ அவசியமே இல்லை என்ற நிலை உண்டாகியுள்ளது. மிகவும் எளிமையான முறையில் UPI என்ற வசதியின் மூலம் நாம் எங்கு சென்றாலும் பணத்தினை செலுத்தி கொள்ளலாம்.

அனைத்து வங்கிகளும் தங்களுக்கென்று ஒரு யூபிஐ ஐடியை வைத்திருக்கும். அதனை போல் பிரபல தனியார் வங்கியான YES Bank தற்போது தனது வங்கியில் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் BHIM என்ற Payment செயலியில் தங்களது ருபே கிரெடிட் கார்டினை பதிவு செய்து வைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இதனால் நாம் இந்த செயலியை பயன்படுத்தி எந்த வணிக நிறுவனங்களிலும் QR கோடினை ஸ்கேன் செய்து பணத்தினை செலுத்தி கொள்ளலாம்.

can pay money through bhim app

ஆனால் இதில் P2P வசதி இன்னும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. BHIM செயலியை தவிர பல வகை செயலிகளான Google Pay, Paytm, Phonepay, PayZapp, Freecharge போன்ற யூபிஐ செயலிகளிலும் இந்த வசதியினை நாம் உபயோகப்படுத்தலாம். ஆனால் தற்சமயம் YES வங்கியானது BHIM செயலியில் தங்கள் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ளும்படி வசதியினை கொண்டு வந்துள்ளது.

BHIM செயலியில் இதனை எவ்வாறு பயன்படுத்துவது?:

  1. முதலில் நாம் BHIM செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  2. இப்போது அதனுள் ‘Link Bank Account‘ என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
  3. + என்ற குறியீட்டினை கிளிக் செய்த பின் அதில் Add Account-ல் Bank Account மற்றும் Credit card என்ற இரு Option வரும்.
  4. பின் கிரெடிட் கார்டு பட்டனை அழுத்திய பின் நமது கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும்.
  5. நமது கிரெடிட் கார்டின் கடைசி 6 இலக்க எண் மற்றும் கிரெடிட் கார்டின் வேலிடிட்டியை கொடுக்கவும்.
  6. பின் நமது மொபைலுக்கு வரும் OTP-யினை கொடுக்கவும்.
  7. பின் நமக்கென்று யூபிஐ பின் எண்ணை உருவாக்கி கொள்ளவும்.

இவ்வாறு நாம் நமது கிரெடிட் கார்டினை பதுவி செய்து கொள்ளலாம். இதனை நாம் தேவைப்படும் இடங்களில் ஸ்கேன் செய்து பணத்தினை மாற்றி கொள்ளலாம்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago