போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தினை பற்றி தெரியாம இருந்தா எப்படி?..3000 முதலீட்டில் 2 லட்சம் வரை பயனடைய செய்யும் பொன்னான திட்டம்..

இந்திய தபால் நிலையங்களில் மக்கள் பயனடையும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன அதில் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது தொடர்வைப்பு சிறுசேமிப்பு திட்டம். போஸ்ட் ஆபிஸின் RD திட்டங்கள், கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேமிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை அடிபடையில் முதன்மையானதாக விளங்குகிறது.

மாதந்தோறும் சிறு தொகையை(குறைந்த பட்சம் ரூ.100/-) தொடர்ந்து சில ஆண்டுகள் போஸ்ட் ஆபிஸில் தவறாமல் கட்டி, டெப்பாசிட் முதிர்வு காலத்தில் அசல் மற்றும் வட்டியை திருப்பி பெற்று கொள்ளலாம்.

இதில் நமக்கு முக்கியமான மற்றும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் RD-யின் வட்டி விகிதத்தை 6.2 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. சிறுசேமிப்பின் லாபம் அதிகப்படும்.

save money through RD scheme

இவ்வட்டி விகித உயர்வினால் ஐந்தாண்டு திட்டத்தில் நீங்கள் மாத தவனையாக ரூ.2000/-, ரூ3000/- மற்றும் ரூ.4000/- செலுத்தும்போது உங்களுக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

மாதத்தவனையாக ரூ.2000/-யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.1,20,000/- மற்றும் வட்டிதொகையான % 21,983/- யும் சேர்த்து ரூ.1,41,983/- கிடைக்கும்.

மாதத்தவனையாக ரூ.3000/- யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.1,80,000/- மற்றும் வட்டிதொகையான  ரூ.31,972/- யும் சேர்த்து ரூ.2,12,972/- கிடைக்கும்.

மாதத்தவனையாக ரூ.4000/- யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.2,40,000/- மற்றும் வட்டிதொகையான  ரூ.43,968/- யும் சேர்த்து ரூ.2,83,968/- கிடைக்கும். ஆஹ! நாமும் போஸ்ட் ஆபிஸ் RD ல் நாம் சம்பாதித்த பணத்தை சேமித்து வளமாக வாழ்வோம்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago