govt update news
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்கள் பெயர் சேர்க்கணுமா…? இந்த ஒரு ஆப் மட்டும் போதும்…!
ரேஷன் கார்டில் புதிதாக குடும்ப உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
அரசு தரப்பில் ஏழை மக்களுக்கு உதவு வேண்டும் என்பதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை இலவசமாகவும் மலிவு விலையிலும் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு கீழ் ரேஷன் கார்டு மூலமாக நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகின்றது.
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்க்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு வீட்டில் இருந்து ஆன்லைனில் செய்து கொள்ளும் முறையை அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக மேரா ரேஷன் 2.0 என்ற ஆப்பை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி பெயர் சேர்க்கும் செயல்முறையை மிக எளிதாகவும் வசதியாகவும் செய்ய உதவுகின்றது.
மேரா ரேஷன் 2.0 ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்குவதை நோக்கமாக வைத்திருக்கின்றது. இந்த செயலியின் உதவியுடன் நாம் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பது மிகவும் எளிதாக இருக்கும். முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மேரா ரேஷன் 2.0 என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பிறகு ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும். அதில் நீங்கள் பல விருப்பங்களை பெற முடியும். நீங்கள் “Family Details” என விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தை கிளிக் செய்த பிறகு ரேஷன் கார்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் தோன்றும். புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பதற்கு “Add New Member” விருப்பத்தை கொடுக்க வேண்டும்.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் ஆதார் அட்டை எண் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் தகவல்களை நிரப்ப வேண்டும். பிறகு உங்களது ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினரின் பெயர் சேர்க்கப்பட்டு விடும். இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உறுப்பினர்கள் பெயர் மட்டுமல்லாமல் பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரேஷன் கார்டின் நிலையை சரி பார்ப்பது, ரேஷன் ரசீது தொடர்பான தகவலை பார்ப்பது போன்ற அனைத்தையும் இதில் செய்ய முடியும். மேரா ரேஷன் 2.0 செயலியின் மூலமாக வீட்டிலிருந்து இந்த பணியை எளிதாக செய்து கொள்ளலாம். இந்த வசதி ரேஷன் அட்டைதாரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.