Categories: latest newstamilnadu

ஒரு மாத குழந்தை இறந்த வழக்கில் நாய் கடித்ததாக கூறும் தாய்… கொலையா? சந்தேகிக்கும் காவல்துறை…

கடலூர் மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி. இவர் கணவர் சக்திவேல் மாலத்தீவில் தங்கி வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தர்ஷன் குமார் எனப் பெயர் வைத்தனர்.

கொடிக்குளம் கிராமத்தில் குழந்தைகளிடம் தனியாக வசித்து வருகிறார் நந்தினி. நேற்று காலை வீட்டின் முன்னர் தர்ஷனை படுக்க வைத்துவிட்டு நந்தினி பின்புறம் இருக்கும் தோட்டத்தில் வேலை செய்து வந்து இருக்கிறார். திடீரென தர்ஷனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து இருக்கிறார்.

குழந்தைக்கு பேச்சு மூச்சில்லாததை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தர்ஷனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார். குழந்தையை நாய் கடித்ததாக நந்தினி கூற, மருத்துவர்களும் பரிசோதித்து விட்டு தர்ஷன் இறந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, நந்தினி அலறி துடித்தவர் தர்ஷனை வீட்டுக்கு தூக்கி வந்து குளிப்பாட்டி உறவினர்களுக்கு இறப்பு செய்தியை கூறி இருக்கிறார். தொடர்ந்து, ஆவினங்குடி போலீசார் குழந்தையை மீட்டு உடற்கூராய்வுக்கு திட்டக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கின்றனர்.

இதுகுறித்து, காவல்துறை தரப்பில் கூறும்போது நந்தினியின் தாய் குழந்தை தர்ஷனை நாய் கடித்ததாக கூறுகின்றார். ஆனால் குழந்தைக்கு கழுத்தில் இறுக்கிய தழும்பை தவிர வேறு காயங்கள் இல்லை. கடித்ததற்கான மார்க்குகளும் இல்லை என்பதால் இது கொலையாகவும் இருக்கலாம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பின்னரே இதுகுறித்து மேலும் தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

AKHILAN

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago