ஊட்டியில் பெய்து வரும் அடைமழையால் அங்கிருக்கும் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மழையுடன் கூடிய கடும்மழை கடந்த 10 நாட்களாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி, குந்தா, கூடலூர், குன்னூர் பகுதிகளில் தொடர்ந்து மழையின் சீற்றம் இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து இருக்கும் நிலையில் காற்று அதிகரித்து இருக்கிறது.
இதனால் பல பகுதிகளில் பல வகையான மரங்கள் அடியோடு விழுந்து இருக்கிறது. காற்றின் வேகத்தினை சமாளிக்க முடியாமல் மரங்கள் வாகனங்கள் மீது சரிந்து சேதமடைந்தது. மேலும் பல இடங்களில் மின் கம்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மரங்களை அகற்றும் பணியில் மீட்புப்பணியினர் கொட்டும் மழையிலும் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று ஒரு நாளில் மட்டுமே 50 மரங்கள் விழுந்து இருப்பதால் 100க்கும் அதிகமான மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி சுற்று வட்டாரத்தில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மரங்கள் விழுந்ததால் எந்தவித உயிர்சேதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…