latest news
என்ன கொடுமடா இது…! ஊதிய உயர்வு கொடுத்ததால் அரெஸ்ட்டான ஓனர்… எதுக்காக தெரியுமா…?
மியான்மர் நாட்டில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக முதலாளியை கைது செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மியான்மர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கைவிடப்பட்டு தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராணுவ தளபதி மின் ஆங்க் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நாட்டில் இருக்கும் மக்கள் பலரும் வேலையில்லாமல் திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அந்த கடைக்காரரின் மூன்று செல்போன் கடைகளையும் அந்த நாட்டு அரசு மூடி இருக்கின்றது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்தால் இதுவரை 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்து அவர்களின் கடைகளை மூடி இருக்கின்றது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் கைதா? இது என்ன விசித்திரமாக இருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். மியான்மர் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் விலைவாசி விண்ணை தொடும் அளவிற்கு இருக்கின்றது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் அந்த நாட்டில் பணவீக்கம் இருக்கின்றது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.
இது அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவாக இருக்கும். இது ஆட்சிக்கு எதிராக தூண்டும் வகை என்று அந்த நாட்டு அரசு நம்புகின்றது. இதனால் அந்த நாட்டில் யாருக்குமே ஊதிய உயர்வு என்பது இல்லாமல் இருந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இப்படி அந்த நாட்டு அரசு தொடர்ந்து கடைகளை மூடுவதால் பலரும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.