Connect with us

Cricket

உலக கோப்பை தொடர்: இந்தியா வரனும்னா இதை செய்யுங்க.. அடம்பிடிக்கும் பாகிஸ்தான்..!

Published

on

Pak-Team-Featured-Img

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதி பெறுவதற்கு முன், அந்த அணிக்கான பாதுகாப்பு குழு முதலில் இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷரிப் இதற்காக தனி குழு ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இந்த குழு தான் பாகிஸ் தான் அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்பது பற்றி முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை மந்திரி பிலாவல் பூட்டோ தலைமையில் இந்த பாதுகாப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சாகா அஷ்ரப் கலந்து கொள்ள இருக்கிறார்.

Pak-Team

Pak-Team

இந்த குழு இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தான் அணி உலக கோப்பை போட்டிகளை விளையாடும் அனைத்து இடங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்ய இருப்பதாகவும், தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14-பேர் அடங்கிய குழுவில் பல்வேறு மந்திரிகள், ஆலோசகர்கள், வெளியுறவு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் என ஏராளமான அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடுவதில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த குழு வீரர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறது என்று கூறப்படுகிறது.

Pak-Team-1

Pak-Team-1

கடைசியாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடியது. அதன் பிறகு இரு அணிகள் மட்டும் மோதிய தொடர் 2012-13 ஆம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக டெஸ்ட் சீரிஸ் போட்டிகள் 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியான தகவல்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 14-ம் தேதிக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதே போன்று மற்ற போட்டிகளின் அட்டவனையிலும் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

google news