Cricket
கிரிக்கெட்டில் புதிய சாதனை…இப்படி கூட ரெகார்ட் படைக்கலாமா?…சம்பவம் செஞ்ச பாகிஸ்தான்……
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தயிருக்கும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து முடிந்துள்ளது.
பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் உட்பட மூன்று பேட்ஸ்மேன்கள் சதமடித்திருந்தனர். இங்கிலாந்திற்கு இந்த ஸ்கோர் கடுமையான சவாலை கொடுக்கு என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய விதமாக அந்த அணியின் பந்து வீச்சினை நாலாப்புறமும் அடித்து பறக்க விட்டனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். ஹேரி புரூக் முச்சதமடித்தார்.
கட்டுப்படுத்த முடியாத வீரராக களத்தில் நின்று கொண்டிருந்த அவரது ஆட்டம் முன்னுற்றி பதினேழு ரன்கள் எடுத்திருந்த போது முடிவடைந்தது. அவருக்கு இணையாக ஜோரூட் அசத்தல் ஆட்டம் ஆடி இங்கிலாந்தின் ஸ்கோர் என்னூறு ரன்களைக் கடக்க உதவினார். அதோடு இந்திய வீரர் சச்சின் சாதனையை சமன் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் இருபதாயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார ரூட்.
இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் துவக்கியது பாகிஸ்தான். முதல் இன்னிங்ஸில் ஐனூறு ரன்களை குவித்திருந்த அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸ் சோரம் போனது. இருனூற்றி பத்து ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் நாற்பத்தி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.
சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது வலிமையை இழந்த அணியாக பார்க்கப்படுகிறது பாகிஸ்தான். பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளிடம் கூட உதை வாங்கும் அளவிற்கு அதன் ஆட்டம் அல்லோலப்பட்டு விட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினையும் படைத்திருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் ஐனூறு ரன்களை குவித்திருந்தும் தோல்வி அடைந்த அணியாக அது மாறியுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மீண்டும் அதே முல்தான் மைதானத்தில் வைத்து வருகிற பதினைந்தாம் தேதியன்று நடைபெற உள்ளது.