பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து ஆண்கள் அணி. முதல் போட்டியில் மட்டும் பாகிஸ்தானை பதம் பார்த்தது இங்கிலாந்து. இரண்டாவது போட்டியிலிருந்து சுதாரிப்பான ஆட்டதினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று துவங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு, ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் தொடர் சம நிலையில் இருந்து வருகிறது.
ஆகவே மூன்றாவது மற்றும் கடைசி போட்டியான இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.
பேட்டிங்கை துவக்கியதிலிருந்தே சீரான இடைவெளிகளில் அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது இங்கிலாந்து. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டக்கெட் மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆகியோர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதமடித்தனர். டக்கெட் 84பந்துகளில் 52ரன்களை எடுத்தார். ஸ்மித் 119பந்துகளில் 89ரன்களை எடுத்து அவுட் ஆனார்.
இவர்கள் இருவருக்கு அடுத்தபடியாக அட்கின்ஸன் 71பந்துகளில் 39ரன்களை எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியின் சாஜித் கான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். நோமன் அலி 3விக்கெட்டுகளையும், சாகீர் முகம்மது 1விக்கெட்டினையும் எடுத்திருந்தார். 68ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி 267 ரன்களை எடுத்து 9விக்கெட்டுகளை இழந்து பேட்டிங் செய்து வருகிறது.
முல்தானில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்திடம் சரண்டர் ஆகியிருந்த பாகிஸ்தான் அணி ராவல்பிண்டியில் இங்கிலாந்தை ரவுண்டப் செய்து வருகிறது தனது அபார பவுலிங்கால்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…