Cricket
பதுங்கிய பாகிஸ்தான்…எகிறி அடிக்கும் இங்கிலாந்து…மீண்டும் ரிப்பீட் மோட்?…
இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் வைத்து நடந்து முடிந்தது. இதில் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது.
பாகிஸ்தான் அணி ஐனூறு ரன்களுக்கு மேல் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி என்னூறு ரன்களை கடந்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் விளையாடிய விதம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
முதல் இன்னிங்சுக்கு நேர் எதிர்மாறாக விளையாடி இருனூற்றி இருபது ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு இன்னிங்ஸ் மற்றும் நாற்பத்தி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐனூறு ரன்களை முதல் இன்னிங்ஸில் கடந்தும் தோல்வியைத் தழுவிய முதல் அணி என்ற மோசமான சாதனையயையும் படைத்தது பாகிஸ்தான் அணி.
இந்நிலையில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் போட்டி நடந்த அதே முல்தானில் வைத்து நடந்து வருகிறது.
டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான சைம் அயூப் எழுபத்தி ஏழு ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான பாபர் அசாம் இந்தப் போட்டியில் சேர்க்கப்படவில்லை. அந்த அணியில் நடுவரிசை ஆட்டக்காரர் கம்ரான் குலாம் சதமடித்தார். நூற்றி பதினெட்டு ரன்களை குவித்திருந்த நிலையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.
முன்னூற்றி அறுபத்தி ஆறு ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது பாகிஸ்தான் நூற்றி இருபத்தி மூன்று புள்ளி மூன்று ஓவர்களில்.
இங்கிலாந்து அணியின் ஜாக் லீச் நான்கு விக்கெட்டுகளையும், கார்சே மூன்று விக்கெட்டுகளையும், மேத்தியூ போட்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும், ஷோகிப் பஷீர் ஒரு விக்கெட்டினையும் எடுத்திருந்தனர். தனது முதல் இன்னிங்ஸின் பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்து அணி நான்கு ஓவர்கள் நிறைவடைந்த சூழலில் இருபத்தி ரன் களை விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.
அந்த அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் பென்டக்கெட் பதிமூன்று ரன்களையும், ஷாக் க்ராலி பத்து ரன்களையும் எடுத்து நிதானமாக ஆடி வருகின்றனர். முதலாவது போட்டியை போலவே இந்த போட்டியிலும் தடுமாற்றத்தை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி பந்து வீச்சிலும், இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கிலும் கவனம் செலுத்துமா அல்லது இந்தப் போட்டியையும் இங்கிலாந்திடம் கோட்டை விட்டு விடுமா? என்ற எண்ணம் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் எழுத் துவங்கியுள்ளது.