மக்கள் அதிக விரும்பி சாப்பிடும் பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருள்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பானி பூரி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பானிபூரி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடைகளில் சாப்பிடும் இந்த பானிபூரிகள் உடல்நலத்திற்கு நல்லதா? என்று கேட்டால் அது தயாரிக்கும் விதத்தில் தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளில் உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பானி பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தி வரும் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பானி பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாஸ் மற்றும் மீட்டா பவுடர் போன்றவற்றில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் அதிக அளவில் இருப்பதாகவும், இது மனித உடலின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் எனக் கூறுகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்களுக்கு விரைவில் தடை விதிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரம் மற்றும் மீட்டா பொருட்களில் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக காரம் சாப்பிடுவதாலும், இதுபோல ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாலும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது.
பானி பூரி தொடர்ந்து 5 முதல் 7 வருடங்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது தொடர்பாக அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளரிடம் பேசி முடிவெடுக்கப்படும். 4 முதல் 5 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்த பிறகு கூட்டம் நடத்தி பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு இருக்கின்றது என்று அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கோபி மஞ்சூரியன் மற்றும் கபாபில் புற்றுநோயை உண்டாக்கும் அதிக தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உணவுகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…