கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பானிபூரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் பின்னணியில் இருக்கும் காரணம் தெரியுமா?
கர்நாடகா ரெய்டு
கர்நாடகாவில் தெருவோர பானிபூரி கடைகள் தொடங்கி பெரிய பெரிய ஹோட்டல்களில் இயங்கிவரும் பானிபூரி விற்பனையகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகவே தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் கடந்த 5 மாதங்களில் சுமார் 4,000 உணவு மாதிரிகள் சோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயை உருவாக்கும் செயற்கை நிறமிகளை பானிபூரி தயாரிப்பில் பயன்படுத்துவதாகத் தொடர் புகார்கள் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பறந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பேசிய கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி கே.சீனிவாஸ், இந்த மாதிரியான உணவு வகைகளை எடுத்துக்கொண்ட பிறகு வாந்தி, பேதி மற்றும் அதுதொடர்பான உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வந்தன. இதையடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகளை உணவுப் பாதுகாப்புத் துறை மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு
இதையடுத்தே, தமிழ்நாட்டிலும் பானிபூரி கடைகளில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியான ரெய்டுகளை நடத்தி உணவை சோதனை செய்தனர். சென்னை மெரீனா உள்பட பல்வேறு பகுதிகள், கோவை, நாமக்கல், கரூர், தேனி, ஆண்டிபட்டி என இந்த சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதில், புற்றுநோயை ஏற்படுத்தும் ரோடமைன் பி என்கிற நிறமியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும், சாயம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. சாலையோர உணவகங்களில் பானிபூரி சாப்பிடும்போது கவனம் தேவை என்று எச்சரிக்கிறார்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…