Connect with us

Cricket

டெஸ்ட் ரீ-என்ட்ரி.. ஒரே போட்டி.. ரேங்கிங்கில் பட்டையை கிளப்பிய பண்ட்.. எந்த இடம் தெரியுமா?

Published

on

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து முதல் முறையாக இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். சென்னையில் நடைபெற்ற இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 39 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்களையும் குவித்து அசத்தினார் ரிஷப் பண்ட்.

இவரைப் போன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தரவரிசையில் முன்னேறியுள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மட்டும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் இரண்டவாது இடத்திலும் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல், ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த பட்டியலில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதே போன்று விராட் கோலி இந்த பட்டியலில் 12 ஆவது இடத்தில் உள்ளார்.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 119 ரன்களை அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்த இந்திய வீரர் சுப்மன் கில் சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது 14 இடத்திற்கு வந்துள்ளார்.

google news