காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்களைத்தான் நாம் செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இறந்து போன காதல் ஜோடிக்கு பெற்றோர் கோலகலமாக திருமணம் செய்து வைத்த சம்பவம் மலேசியாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மனிதர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் செண்டிமெண்டுகளுக்கு முன்னாள் அறிவியல் கூட நிற்க முடியாது. அறிவுப்பூர்வமாக பார்க்கும் போது சில விஷயங்கள் முட்டாள்தனமாக கூட தெரியலாம். ஆனால், உணர்வு பூர்வமாக பார்த்தால் அதில் இருக்கும் அன்பு புரியும். காதலும், பாசமும் கூட அப்படி ஒரு உணர்வுதான்.
மலேசியாவை சேர்ந்தவர்கள் ஜிங்ஷன் மற்றும் லீ. இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு அவர்களின் பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டினார்கள். இவர்களுக்கு ஜூன் 2ம் தேதி திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கடந்த மே 24ம் தேதி நடந்த சாலை விபத்தில் காதல் ஜோடி இருவரும் மரணமடைந்தனர்.
இது, காதல் ஜோடியின் பெற்றோர்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அவர்கள் இருவரின் புகைப்படங்களையும் வைத்து அவர்களின் பெற்றோர்கள் கோலோகலமாக திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தின் மூலம் இறந்த பின்னரும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என தாங்கள் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…